Naai Sekar Returns movie release date update
Naai Sekar Returns movie release date update

வைகைப்புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வைகைப்புயல் வடிவேலு அவர்கள் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் இணைந்து பிக்பாஸ் ஷிவானி, சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளார்கள்.

காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தில் வடிவேலு பாடிய அப்பத்தா என்ற பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.