நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Naai Sekar Returns First Look Poster : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாக இருந்த இருபத்தி நான்காம் புலிகேசி படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் படக் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவருக்கு ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

கொலைவழக்கில் கைதான, மல்யுத்த வீரரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த படத்தினை சுராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. போஸ்டரில் வடிவேலு கோட்டு சூட்டுடன் சுற்றி நாய்களின் பாதுகாப்போடு அமர்ந்து கொண்டு உள்ளார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அவரை யாரும் இந்த மாதிரி பர்த்து இருக்க மாட்டாங்க! – Actor GV.Prakash Speech |BagheeraTrailerLaunch