Mysskin's Story to Vijay
Mysskin's Story to Vijay

விஜய்க்காக கதை ஒன்றை வைத்து இருப்பதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

Mysskin‘s Story to Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரை வைத்து படம் இயக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.

விஜய் பிறந்த நாளுக்கு ட்ரீட் இருக்கு.. ஆனால்?? – மாஸ்டர் பட பிரபலம் வைத்த டுவிஸ்ட்!

அவர்களில் மிஸ்கினும் ஒருவராக இருக்கிறார். தனித்துவமான இயக்குநராக விளங்கி வரும் மிஸ்கின் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் விஜய்க்கு ஸ்கிரிப்ட் தயார் செய்வீர்களா என கேட்கப்பட்டிருந்தது. அதற்கு மிஷ்கின் நான் கமலஹாசன் அவர்களுக்கு ஒரு ஸ்கிரிப்டை உருவாக்கினேன். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டு விட்டது.

இது என்னங்க நியாயம்?? என் பையன் ஹீரோவா நடிக்க போறான்னு சொன்னதும் வடிவேலு பொறாமை பட்டார் – மீண்டும் பரபரப்பை கிளப்பிய நடிகரின் பேச்சு!

அந்தக் கதை விஜய்க்கு செட் ஆகும்னு நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். அது பௌத்தம் சார்ந்த ஒரு கதை. விஜய் திரைப்பயணத்தில் அது ஒரு க்ளாசிக் திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த திரைப்படம் ஆக்சன் காட்சிகள் நிறைய இடம்பெறும் படமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.