Mysskin Announced Pisasu 2
Mysskin Announced Pisasu 2

மிஷ்கினின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mysskin Announced Pisasu 2 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவருடைய படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு.

இறுதியாக விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்த இவர் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

இதனையடுத்து இந்த லாக் டவுனில் மொத்தம் 13 கதைகளை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் மிஸ்கின் தன்னுடைய அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

மெட்ரோ ரயில் , பஸ்கள் இயங்க அனுமதி – அடுத்த கட்ட தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு.!!

அதன்படி தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு மிஸ்கின் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mysskin Blast Vishal

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு டைட்டில் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.