Myna Nandhini With Baby
Myna Nandhini With Baby

முதல் மரியாதை மைனா நந்தினி தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Myna Nandhini With Baby : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் வலம் வருபவர் மைனா நந்தினி.

முதல் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவர் யோகேஸ்வரன் என்ற சீரியல் நடிகரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மைனா நந்தினி இரண்டாவது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமான ஒன்றாக அமைந்தது. சமீபத்தில் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்து விட்டது.

Myna Nandhini Blessed With Boy Baby

இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய குழந்தையின் பிஞ்சு கையை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். ஆனால் முகத்தை காட்டவில்லை.

இந்த க்யூட்டான புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் செம வைரலாகி வருகிறது. மைனா நந்தினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.