புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார் மைனா நந்தினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி தொடரில் மைனா ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மைனா நந்தனி. இது மட்டுமில்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.
மேலும் வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3 ,நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3, விக்ரம், விருமன் ,சர்தார்,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் பிசியாக நடித்து வரும் மைனா நந்தினி தற்போது புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளார். அது என்னவென்றால் புடவை தொழில்தான். பொன்னூஞ்சல் சாரீஸ் என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.
இவரது தொழில் வெற்றிடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.