கணவருடன் வித்தியாச வித்தியாசமான கெட்டப்பில் மைனா நந்தினி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Myna Nandhini Marriage Photoshoot : தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மைனா நந்தினி. நடிகையாக மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாக சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரை நடிகர் யோகேஷ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மைனா தன்னுடைய கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் விதவிதமான வீடியோக்களை வெளியிடுகிறார். இந்த நிலையில் தற்போது இதே விதமான திருமண கெட்டப்புகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இவர்கள் வயதான தோற்றத்தில் நடத்திய போட்டோஷுட் புகைப்படம் ரசிகர்களிடையே லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.