மைனா நந்தினி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

Myna Nandhini in Preganancy Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இதனைத் தொடர்ந்து சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருகிறார். யோகேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

இன்று, ஜூடோ கலையின் தந்தை பிறந்த தினம் : கூகுள், டூடுலில் பதிந்து மரியாதை

இதையடுத்து தற்போது இவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட இரண்டாவது முறையாக மைனா நந்தினி கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர்.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction | Rajinikanth, Nayanthara | HD

ஆனால் இது அவரின் முதல் கர்ப்பத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். மொபைல் போனைப் பயன்படுத்தும்போது திடீரென இந்த புகைப்படம் கண்ணில் பட்டதால் அதனை பகிர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.