மைனா நந்தினி

முதல் முறையாக தன்னுடைய மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் மைனா நந்தினி.

தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் மைனா நந்தினி. வெள்ளித் திரையிலும் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து ஒரு வருட இடைவெளிக்கு பிறகு சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதுவரை தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்த மைனா நந்தினி தற்போது முதல் முறையாக அவருடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குழந்தையோடு இவர்கள் நடத்திய அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன.