Myna Nandhini About Her Pregnancy
Myna Nandhini About Her Pregnancy

நடிகை மைனா நந்தினி கர்ப்பமாகி இருப்பது அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் வீடியோ மூலமாக தெரிய வந்துள்ளது.

Myna Nandhini About Her Pregnancy : தமிழ் சின்னத்திரையிலும் வெள்ளித் திரையிலும் நடித்து வருபவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இவரின் முதல் திருமணம் செய்து கொண்ட ஒரு ஒரு வருடத்திற்குள்ளாகவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கடந்த வருடம் சீரியல் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

பதட்டத்தோடு தான் இதை செய்தேன், ஆனால் இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல – நடிகர் சாந்தனு வெளியிட்ட அறிக்கை!

தற்போது யோகேஸ்வரன் உடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். மேலும் இவருக்கு சமீபத்தில் பிறந்த நாள் சென்றது. தன்னுடைய கணவர் குடும்பத்தாருடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் மைனா நந்தினி குண்டாக இருப்பதும் அவர் வயிறு கொஞ்சம் பெரியதாக இருப்பதையும் கவனித்ததுடன் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் வாய் திறக்காத மைனா நந்தினி பேட்டி ஒன்றில் ஆம் நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் மைனாவுக்கும் யோகேஸ்வரனுக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.