Mutton Soup

Mutton Soup : ஆரோக்யமான மட்டன் சூப் செய்வது எப்படி தெரியுமா? வாங்க இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மட்டன் – ¼ கிலோ

மிளகு தூள் – 1 ஸ்பூன்

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

காய்ந்த மிளகாய் – 2

இஞ்சி,பூண்டு விழுது – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

எண்ணை – சிறிதளவு

மல்லி இலை – சிறிதளவு

செய்முறை :

நன்கு சுத்தம் செய்யப்பட்ட மட்டனில் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

பின், கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டுத் தாளித்து தனியாக வேக வைத்து இருத்த மட்டனை அதனுடன் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின் மிளகு தூள், மல்லி இலை தூவி இறக்கினால் சுவையான மட்டன் சூப் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here