Mutton Curry Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Mutton Curry Recipe :

தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ,
சின்ன வெங்காயம் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 2,
தக்காளி – 2,
கறிவேப்பிலை – 4 கொத்து,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி,பூண்டு விழுது – 2 டீஸ்பூன், இஞ்சி- சிறிது,
பூண்டு – சிறிது,
முந்திரி – 6,
கடுகு – 1 டீஸ்பூன்,
சோம்பு – 1டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பட்டை – 1,
பிரியாணி இலை – 1,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
தனியா தூள் – 3 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
கறிமசால் தூள் – 1 டீஸ்பூன்,
தேங்காய் துறுவல் -சிறிது
மல்லி தழை – சிறிது,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

1) சுத்தம் செய்த மட்டனுடன் நீர், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

2) கடாயில் எண்ணெய் ஊற்றி , 1 ஸ்பூன் சீரகம், சோம்பு ,சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய், 3 கொத்து கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து வதக்கவும்.

பாதாம் எண்ணெயிலும் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!

3) பின்னர் தனியா தூள், சிறிது இஞ்சி , பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்.

4) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு ,பட்டை, பிரியாணி இலை,
நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்.

5) பின்னர் அதனுடன் கறிமசால் தூள், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலா நீர், உப்பு சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here