விருமன் படத்தின் கதை இதுதான் என படத்தின் இயக்குனர் முத்தையா தெரிவித்துள்ளார்.

Muthaiah About Viruman Story : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது நடிப்பில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இந்த படத்தை முத்தையா இயக்கியுள்ளார்.

“என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவம். வாழ்க்கையில் எல்லோரும் தவறுகள் செய்வார்கள். அந்தத் தவறுகளை யாராவது தட்டிக் கேட்கணும். அப்பா, அம்மா, அண்ணன், அக்கான்னு யாரோ ஒருத்தர் அதை சுட்டி காட்டணும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவு தான் நல்ல உறவு. அந்த நேர்மையை பேச வருபவன் தான் “விருமன்”. தட்டிக் கேட்கிறவனாக “விருமன்” இருப்பான். “விருமன்” தான் கார்த்தி. குலசாமி பெயர். விருமன்னா தேனிப்பக்கம் பிரம்மன் என்று சொல்வாங்க. அதுதான் கதைக்களம்.” என்றார் டைரக்டர் முத்தையா.

மேலும் தொடர்ந்து, சாதுவாகவும்.. முரடனாகவும் எப்படி வேணும்னாலும் கார்த்தி சாரை காட்டலாம். அவர் டைரக்டர்களுக்கு கிடைத்த வரபிரசாதம். இதில் எல்லாமே உறவுகள் தான். இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படியிருந்தாங்க, இன்றைக்கும் அப்படித்தான் இருக்கணும்னு சொல்றவன்தான் விருமன். உறவுகள் சூழ ஒற்றுமையோடு இருந்து, அவர்களுக்கு பிரச்னைனா முன்னாடி நிற்கிறவன் விருமன் தான்.”

நான் எழுதினதைவிட, சொன்னதைவிட நடிச்சுக் காட்டியதைவிட, எதிர்பார்த்ததைவிட அனைவரும் அமர்க்களப் படுத்தியிருக்கிறார்கள். வன்முறை ஏரியாவைக் குறைச்சு, ஃபேமிலி, ஆக்‌ஷனில் கவனம் செலுத்தியிருக்கேன்.”

உறவுகளை மீறி வேறு எதுவும் இங்கே இல்லை. எங்கே போனாலும் இங்கேதான் வந்து சேரணும். விருமன் உங்களோட இணைஞ்சு நிர்பான். விருமனைப் பார்த்தால் எல்லோருக்கும், அவர்களுக்கு பிடித்தமான இருவரை நினைத்துக் கொள்வார்கள். மறந்துபோன உறவு மனசுல வரும். நியாயங்களை, உறவுகளை எளிதில் காணக்கூடிய மனிதர்களை முன் நிறுத்தி இருக்கேன். அவ்வளவுதான்.. “

டைரக்டர் ஷங்கர் சாரோட பொண்ணு, தேன்மொழி என்கிற கேரக்டர்ல அசத்தியிருக்காங்க. செட்ல, ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ்ன்னு பார்த்தாலே பெரிய மரியாதையாக இருக்கும். பந்தல் பாலுன்னு கருணாஸ், குத்துக்கல்லுன்னு ஒரு கேரக்டரில் சூரி நடித்திருக்கிறார். இவர்களுடன் வசுமித்ர, மனோஜ்,ஆர்.கே.சுரேஷ், மைனா நந்தினின்னு நல்ல கேரக்டர்கள் நிறைய. அம்மாவாக சரண்யா. அவங்க தான் கதையே. குணம் கெட்ட மனுஷங்களால் இந்த குலமே அழியுது. அப்படி யாரும் இருந்திடக் கூடாதுன்னு சொல்ல இத்தனை பேரும் முன்னே நிக்க வேண்டியிருக்கு. வடிவுக்கரசி தேனி ஜில்லாவோட பழம்பெரும் கிழவியாக, மிடுக்கா நடை உடை பாவனையில் வாழ்ந்திருக்காங்க.” என்றார் டைரக்டர்.

நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிப்பான ‘கடைக்குட்டி சிங்கத்தின்’ பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, மீண்டும் கிராமத்து நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் 60 நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. திட்டமிட்ட வகையில் படப்பிடிப்பு முடிந்ததில் படக்குழு உற்சாகமாக உள்ளது.

கார்த்தி, அறிமுகம் அதிதி ஷங்கர், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ராதிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்தின் இசை மற்றும் டிரெயலர் வெளியீடு குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.