மாநாடு படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Music Rights Announcement of Maanadu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

மாநாடு படத்தின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - தெறிக்க விட்டு கொண்டாடும் ரசிகர்கள்

இந்தப் படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். தற்போது மாநாடு படம் பற்றிய சூப்பரான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தப் படத்தின் மியூசிக் ரைட்ஸை யுவன் சங்கர் ராஜாவின் யு1 ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் குறித்த அறிவிப்பை நாளை யுவன் சங்கர் ராஜா அறிவிப்பார் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.