Music Composer TS Muralitharan Death

சூர்யா நடித்த ஸ்ரீ படத்தின் இசையமைப்பாளர் திடீரென மரணம் அடைந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Music Composer TS Muralitharan Death : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று ஸ்ரீ. இந்த “ஸ்ரீ” படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் நேற்று (18.7.21) காலமானார். இந்த படத்தில் வசந்தசேனா வசந்தசேனா என்ற பாடல் மிகவும் பிரபலம்.

கோத்தம் என்கிற ஹிந்தி படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம் – மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இஷான் கிஷன்- ஷிகர் தவான் அதிரடி அரைசதம் : தெறித்து ஓடியது இலங்கை..

இரண்டே பேர் நடித்த “வித்தையடி நானுனக்கு” என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள அவர், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan – Anirudh-க்கு நன்றி சொன்ன கவின்! – விரைவில் ரிலீஸ்தேதி அறிவிப்பு | Lift Movie | HD

இவருடைய மறைவிற்கு ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.