கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

Music Composer of SK21 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகும் படங்களை தயாரித்து வெளியிடுகிறார். இவரது தயாரிப்பில் இறுதியாக கடாரம் கொண்டான் என்ற திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK21 என்ற பெயரிடாத படத்தை தயாரிக்கிறார்.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா? முதல் முறையாக இணையும் கூட்டணி

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும் படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா? முதல் முறையாக இணையும் கூட்டணி

அதாவது சிவகார்த்திகேயனின் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஒருவேளை இது உறுதியானால் சிவகார்த்திகேயன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் முதல் படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.