Muscle Cramps : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Muscle Cramps :

மனிதனின் இயக்கத்துக்கு தசைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தத் தசைகள் சுருங்கி, தளரும் தன்மை கொண்டவை. இவை, இயற்கைக்கு மாறாக சுருங்கி வலியை ஏற்படுத்துவதைத் தசைப்பிடிப்பு என்கிறோம்.

1) நாமே கை, கால்களை முறுக்கி, தசைப்பிடிப்பை சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.

2) தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில் எண்ணெய்யை கொண்டு அல்லது வேறு ஒரு மசாஜின் பொருட்களை கொண்டு அதிக அழுத்தம் கொடுத்துத்
தேய்த்து விடுதல் கூடாது.

தசைப்பிடிப்பு ஏற்பட்ட இடத்தில், தசை, பலவீனம் அடைந்து இருக்கும். எனவே, தேய்ப்பதால், உள் காயம் ஏற்படும்.

மந்தாரை கீரையில் பொதிந்து கிடக்கும் மகத்துவங்களை தெரிந்து கொள்வோமா ?

3) தசைப்பிடிப்பு ஏற்பட்டால் முதலில் சூடாக சுக்கு மல்லி காபி குடிக்கலாம். சுக்கு, வலியைப் போக்கும் தன்மை உடையது.

4) குளிர்ந்த நீரையோ அல்லது குளிர்பானங்களையோ அருந்தக் கூடாது.

5)தசைப்பிடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு அதிக வேலை கொடுக்கக் கூடாது. ஓய்வு எடுக்க வேண்டும்.

6) ஒரு மின்சார வெப்பமூட்டும் அட்டையோ அல்லது சுடுநீரில் நினைத்து பிழிந்த துணியையோ எடுத்து, வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

7) கற்பூராதித் தைலம், முறிவு எண்ணெய், காயத்ரி மேனித் தைலம், நாரயணத் தைலம் ஆகியவற்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here