Murungaikai Chips Movie Trailer

ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள முருங்கக்காய் சிப்ஸ் படத்தின் டிரைலர் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Murungaikai Chips Movie Trailer : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் ஷாந்தனு. இயக்குனர் பாக்யராஜின் மகனான இவர் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

இவர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தங்கம் என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்திருந்தார்.

இவற்றைத் தொடர்ந்து இவரது நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். ஸ்ரீஜர் என்பவர் இப்படத்தை இயக்க ரவீந்தர் சந்திரசேகர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. படத்தின் டிரைலரே கிளுகிளுப்பாக இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.