முருங்கக்காய் சிப்ஸ் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.

Murungaikai Chips Movie Title Issue : தமிழ் சினிமாவின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சாந்தனு அதுல்யா ரவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் முருங்கைக்காய் சிப்ஸ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி இருந்தன. விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீ லக்ஷ்மி சண்முகானந்தம் பிலிம்ஸ் நிறுவனம் ஏற்கனவே நாங்கள் முருங்கைக்காய் என்ற தமிழ் திரைப்பட தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளோம். முருங்கைக்காய் என்ற தலைப்பிற்கான முழுமையான உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது. இந்த தலைப்பையே அல்லது இதேபோல் உள்ள தலைப்பையோ பயன்படுத்துவது சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு எதிரானது.

இப்படியான நிலையில் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு முருங்கைக்காய் சிப்ஸ் என தலைப்பு வைத்துள்ளனர். இது விதிமுறைகளுக்கு புறம்பானது. இதனால் லிப்ரா தயாரிப்பு நிறுவனத்திற்கு ஸ்ரீ லஷ்மி சண்முகானந்தம் பிலிம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீசில் தாங்கள் பதிவு செய்துள்ள அடிமை படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் முருங்கைக்காய் சிப்ஸ் இத்திரைப்படம் டைட்டில் பிரச்சனையில் சிக்கி உள்ளது. இந்த விவகாரத்தில் படக்குழு எந்த மாதிரியான முடிவை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.