Murungaikai Chips First Look
Murungaikai Chips First Look

சாந்தனு நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Murungaikai Chips First Look : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருபவர் சாந்தனு பாக்யராஜ். இவர் தற்போது விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் அதுல்யாவுடன் இணைந்து முருங்கை காய் சிப்ஸ் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஸ்ரீஜர் என்பவர் இயக்க லிப்ரா புரோடக்சன் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

கொரானா அச்சுறுத்தலுக்கு இடையே விஜய் சேதுபதி கொடுக்கும் ட்ரீட் – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் இப்படத்தில் பாக்கியராஜ் மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தரன் குமார் என்பவர் இசையமைத்துள்ளார்.

நிச்சயமாக இது ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என சாந்தனு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.