murugan

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் முருகன் ஆகியோர் கூறிவரும் வாக்குமூலங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்ததில் முருகன், சுரேஷ் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரிடம் அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:

தெலுங்கில் 2 படங்களையும் தயாரித்தோம். ஆனால், சில காரணங்களினால் வெளியாகவில்லை. அப்படத்தில் நடித்த நடிகைக்கும் சம்பளம் கொடுக்கமுடியவில்லை. எனவே, அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, மீண்டும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

trichy

அதன்பின் திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தோம். அதன்பின் தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த ஒரு நடிகையை சந்தித்து பேசினோம். ஆனால், அவர் கால்ஷீட் இல்லை என்றார். அப்போது, சில நகைகளை அவரிடம் கொடுத்தோம். கொள்ளையடித்த பணத்தில் சில தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களிடம் நகை வாங்கிக்கொண்டு நடிக்காமல் போன அந்த நடிகை விஜய் மற்றும் சிவகார்த்திகயனோடு நடித்த அந்த வாரிசு நடிகையிடமும், முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் தொடர்பில் இருந்த சில நடிகைகளிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த விவகாரம் அந்த நடிகைகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.