தளபதி விஜய் நடித்து வரும் சர்க்கார் படத்தின் படக்குழுவினரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரித்து ட்வீட் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தை பற்றிய படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அப்படி தாங்கள் அளித்த பேட்டிகளில் சில ஜூனியர் ஆர்டிஸ்ட்ஸ் படத்தின் கதை, கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளனர்.

இதனால் கோபமான முருகதாஸ் இனி ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தாங்கள் அளிக்கும் பேட்டிகளில் தங்களின் அனுமதி இல்லாமல் யாராவது சர்கார் படத்தை பற்றி பேசினால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளார்.