Murugadoss to Direct Allu Arjun : Super Star Rajinikanth | Thalapathy Vijay | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Darbar

Murugadoss to Direct Allu Arjun :

முருகதாஸின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறாராம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

தர்பார் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

மீண்டும் சூர்யா ஜோடியாக நடிக்கும் ஜோதிகா; சூர்யாவே சொன்ன தகவல் இதோ!

அண்மையில் மும்பையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பை இம்மாத இறுதியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. முருகதாஸின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கிறாராம்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் துப்பாக்கியைத் தொடர்ந்து முருகதாஸின் இந்த படத்தையும் கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.