
சர்கார் சர்ச்சை :
சர்கார் திருட்டு கதை விவகாரம் குறித்து பேட்டி அளித்து வரும் முருகதாஸ் குறி என்னவோ விஜய்க்கு தான் ஆனால் பழி என் மீது என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சர்கார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குனரான வருண் ராஜேந்தர் போர்க்கொடி தூக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே. பாக்யராஜ் என்னுடைய கதையை படிக்காமலேயே இரண்டு கதையும் ஒன்று தான் என எப்படி கூறுகிறார் என குமுறுகிறார் முருகதாஸ்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போது முருகதாஸ் குறி என்னவோ விஜய்க்கு தான், ஆனால் பழி என் மேல என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய முருகதாஸ் ஒரு வீட்டை தாக்க வேண்டும் என்றால் முதலில் வீக்கான ஜன்னலின் மீது கல்லை எரிய வேண்டும். தற்போது எனக்கும் அதை தான் செய்கிறார்கள்.
இது எனக்கும் நேர்ந்த அக்கினி பரிச்சை. இதை நான் தான் எதிர் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.