Murugadoss Salary for Thalapathy 65
Murugadoss Salary for Thalapathy 65

தளபதி 65 படத்திற்காக முருகதாஸ் தன்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டதாக  தகவல்கள் கசிந்துள்ளன.

Murugadoss Salary for Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகயுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்காக விஜய்க்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முருகதாஸ் தனக்கு சம்பளமாக தர்பார் படத்திற்கு வாங்கியது போலவே ரூபாய் 35 கோடி கேட்டுள்ளார்.

தளபதி 65-ல் இவரா ஹீரோயின்.. விஜய்க்கு செம ஜோடி ரெடி?? – முதல் முறையாக வெளியான தகவல்

இதனால் சன் பிக்சர் நிறுவனம் கொஞ்சம் சைலன்டாக இருந்துள்ளது. இதனையடுத்து முருகதாஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பளத்தை குறைக்குமாறு கூறியுள்ளது.

35 கோடியில் இருந்து கொஞ்சம் குறைத்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் முருகதாஸ். அப்போதும் சன் பிக்சர்ஸ் அமைதி காக்க முருகதாஸ் சரி நீங்களே சொல்லுங்கள் எனக் கூற அந்நிறுவனம் ரூபாய் 18 கோடி தான் என கூறியுள்ளது. முருகதாசும் வேறு வழி இல்லாமல் சரி என ஒப்புக் கொண்டுள்ளார்.

தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை கொடுக்காததும் சர்க்கார் திரைப்படம் வசூலை ஈட்டி இருந்தாலும் விமர்சன ரீதியாக எதிர்மறையான கருத்துக்களை பெற்றது இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன என்பது சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் சம்பந்தப்பட்ட முருகதாஸுக்கும் தான் தெரியும்.