Murugadoss Salary for Next Movie
Murugadoss Salary for Next Movie

ஸ்பைடர் சர்க்கார் தர்பார் போன்ற படங்களை எதிர்மறை விமர்சனங்களால் முருகதாஸின் சம்பளம் ஒரே அடியாக குறைந்துள்ளது.

Murugadoss Salary for Next Movie : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தவர் முருகதாஸ். கடந்த சில வருடங்களாக இவருக்கு நேரம் சரியில்லை.

இவர் இயக்கிய ஸ்பைடர் படுதோல்வி அடைந்தது. அதன் பின்னர் விஜய்யை வைத்து இயக்கிய சர்க்கார் திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை அதிகம் பெற்றது. அதன் பின்னர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ரஜினிக்கு பிறகு ரூபாய் 100 கோடி ஹிட் கொடுத்தது விஜய்யும் இல்லை அஜித்தும் இல்லை இவர் தான் – பலருக்கும் தெரியாத தகவல்.!

இதனால் முருகதாஸ் சம்பளம் அட்லியின் சம்பளத்தை விட கம்மியாகியுள்ளது. இவர் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கப் போகும் தளபதி 65 படத்திற்காக ரூபாய் 18 கோடி சம்பளம் தான் வாங்க உள்ளார்.

தற்போது வளர்ந்து வரும் இயக்குனரான அட்லியே ரூபாய் 25 கோடி சம்பளம் வாங்குகிறார். இப்படியான நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர் சறுக்கல்களால் தற்போது உங்களுக்கு 18 கோடி தான் தர முடியும் என கூறி விட்டது. முருகதாஸிம் வேறு வழியில்லை என்பதால் இதற்கு ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.