ரஜினியின் பெயர் உட்பட தர்பார் படத்தின் மொத்த ரகசியங்களையும் வெளியிட்டுள்ளார் முருகதாஸ்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் முருகதாஸ். இவர் விஜயை வைத்து சர்கார் திரைப்படத்தை இயக்கி இருந்ததை தொடர்ந்து ரஜினியை வைத்து தர்பார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என பலர் நடித்து வரும் இந்த படத்தை பற்றி முருகதாஸ் பல சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் நடிப்பதாக கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிப்பதாகவும் கூறியுள்ளார்.
தர்பார் முழுக்க முழுக்க போலீஸ் கதை மட்டும் தானே தவிர இதில் சுத்தமாக அரசியல் இல்லை என கூறியுள்ளார்.
ரஜினியின் இன்ட்ரோ பாடலை SPB பாட இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் படத்தின் கதையை மட்டும் சொல்ல மாட்டேன். பொங்கல் வரை காத்திருங்கள் என கூறி விட்டார்.