Murugadoss Request to Rajinikanth

தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஓகே சொல்லி பின்னர் விலகிய நிலையில் முருகதாஸ் டாப் ஹீரோ ஒருவருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Murugadoss Request to Rajinikanth : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் ஏ ஆர் முருகதாஸ். அஜித் விஜய் சூர்யா விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் இறுதியாக எழுதி இயக்கிய சர்க்கார், தர்பார் உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் முருகதாசிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்ற குற்றச்சாட்டுகளில் சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன. இதனால் அடுத்து நிச்சயம் ஒரு ஹிட்டை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முருகதாஸ்.

தளபதி விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்த நிலையில் தற்போது அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதனால் அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த்தை தொடர்பு கொண்டு தனக்கு ஒரு வாய்ப்பு தர கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.