தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜயை வைத்து சர்கார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து முருகதாஸ் யாரை இயக்குவார் என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ரஜினிகாந்தை வைத்து தான் தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளாராம் முருகதாஸ். அதற்காக கதையையும் தயார் செய்து விட்டதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.

முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் படத்தின் கதையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக எழுதப்பட்டது தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனதால் தான் விஜயிடம் கதை கூறி நடிக்க வைத்தார் முருகதாஸ்.