Murugadoss Movies Update

Murugadoss Movies Update : விஜயுடன் மீண்டும் கூட்டணி அமைக்க போவதாக முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு இன்ப செய்தியை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி விட்டார்.

அடுத்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து பக்கா அரசியல் படம் ஒன்றை இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது முருகதாஸ் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் பல சூப்பரான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதாவது அவரிடம் கத்தி, துப்பாக்கி இந்த இரண்டு படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு முருகதாஸ் துப்பாக்கி 2 படத்தை அதற்கான நேரம் வரும் போது இயக்குவேன் என கூறியுள்ளார். மேலும் அஜித்துடன் இணைவது எப்போது என கேள்வி கேட்டுள்ளனர்.

இந்த கேள்விக்கு முருகதாஸ் தல அஜித்திற்காக மாஸான கதை ஒன்று உள்ளது, அஜித் அழைத்தால் உடனே படத்தை தொடங்கி விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் சிம்புவுடன் இணைந்து பணியாற்றவும் ஆசை படுவதாக முருகதாஸ் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here