Murugadoss & Kathti

Murugadoss & Kaththi Issue : 

எந்நேரமும் சென்னை போலீசாரால் முருகதாஸ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தலாம் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவர் இறுதியாக தளபதி விஜயை வைத்து சர்கார் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் அதிமுக அரசை நேரடியாக விமர்சனம் செய்திருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது, மேலும் இந்த சர்கார் பட கதை திருட்டு கதை என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதே போல முருகதாஸ் இயக்கி இருந்த கத்தி படமும் திருட்டு கதை, தாகபூமி என்ற பெயரில் நான் எழுதிய கதை என அன்பு ராஜசேகர் கூறி வருகிறார்.

மேலும் இவர் கதைகளை திருடி படமெடுக்கும் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரின் தனி பிரிவில் புகாரளித்து இருந்தார்.

இதனையடுத்து காப்புரிமை சட்டத்தின் படி இந்த பிரச்னையை விசாரிக்கும் படி T.நகர் காவல் கணிக்கணிப்பு அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் முருகதாஸ் வீட்டின் கதவை போலீசார் எப்போது வேண்டுமானாலும் தட்டி விசாரணை நடத்தலாம் என தகவல்கள் கூறுகின்றன.

இதனால் தளபதி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.