Murugadoss Join With Sivakarthikeyan

தளபதி விஜய்க்கு சொன்ன அதே கதையில் முன்னணி நடிகர் ஒருவரை முருகதாஸ் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Murugadoss Join With Sivakarthikeyan : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் முருகதாஸ் சொன்ன கதை முழு திருப்தியை அளிக்காததால் விஜய் அந்த படத்தை நிராகரித்தார்.

அதன்பின்னர் தளபதிவிஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் கூறிய கதையை ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் சிவகார்த்திகேயனிடம் கூறியிருப்பதாக அந்த கதை சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இவர்கள் இருவரும் இணைவார்கள் இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்க்கு சொன்ன கதையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.