Thuppaakki 2
துப்பாக்கி 2 படத்தின் கதையை பற்றி முருகதாஸ் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தை பற்றி பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அந்த பேட்டியில் துப்பாக்கி 2 படத்தின் கதை பற்றி கேட்க மும்பையை சுற்றி நடப்பது போன்ற கதையாக இருக்கலாம் அல்லது வேறு கதையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் நேரம் வரும் போது துப்பாக்கி 2 வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.