Suriya and Murugadoss
சூர்யா தயாரித்துள்ள சில்லு கருப்பட்டி படம் பற்றி டீவீட் போட்ட முருகதாஸை நெட்டிசன்கள் கலாய்த்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து நல்ல நல்ல படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த வாரம் சில்லு கருப்பட்டி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

தற்போது இந்த படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன், வாழ்த்துக்கள் என ட்வீட் ஒன்றின் மூலமாக படத்தை பாராட்டியுள்ளார் முருகதாஸ்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் கேள்விப்பட்டீங்களா.. அப்போ படத்தை பார்க்கல அதானே என கேள்வி எழுப்பியதுடன் கதை திருடாமல் படம் எடுத்து இருக்கிறார்கள் என கூறி சர்கார் கதை திருட்டு சர்ச்சை விவகாரத்தை குத்தி காட்டி வருகின்றனர்.

சூர்யா ரசிகர்கள் தலைவன் சூர்யா தயாரிச்சா நல்ல படமாக இருக்கும் என கூற அஜித் ரசிகர்களும் அது உண்மை தான் என ஆதரவு கமெண்ட் தட்டுகின்றனர்.

எப்போது மீண்டும் சூர்யா முருகதாஸ் கூட்டணி உருவாகும் எனவும் ஆவலுடன் கேட்கின்றனர். பதில் சொல்லுங்க ARM.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.