Director A.R.Murugadoss

Director A.R.Murugadoss : சர்கார் படத்திற்கு ஆளும் கட்சியான அதிமுக தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருவதால் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் முருகதாஸ்.

முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

இந்த படத்தில் ஜெயலலிதாவையும் அவரது இலவச திட்டங்களையும் விமர்சனம் செய்து இருந்ததால் படத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர்.

விஜய், முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யவும் அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர் போராட்டங்கள் மற்றும் கண்டனங்களால் சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்து அதற்கான வேலைகள் நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here