Murugadoss About Joins With KamalHaasan
Murugadoss About Joins With KamalHaasan

அவரோடு இணைந்தால் படம் டபுள் மாஸாக இருக்கும் என முருகதாஸ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Murugadoss About Joins With KamalHaasan : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் முருகதாஸ். இவர் தல அஜித்தை வைத்து தீனா என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்து இருந்தார்.

தீனா பட வெற்றியால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்று முன்னணி இயக்குனராக இடம் பிடித்தார். அதன் பின்னர் தளபதி விஜய்யை வைத்து கத்தி, துப்பாக்கி, சர்க்கார் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து தர்பார் என்ற படத்தையும் இயக்கினார். தற்போது மீண்டும் தளபதி விஜயை வைத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி 65 என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த நிலையில் முருகதாஸின் லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் என் நீங்கள் கமல்ஹாசனுடன் இன்னும் இணையவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த முருகதாஸ் உலக நாயகனுடன் நிச்சயம் இணைவேன், கமல்ஹாசனுடன் இணைந்தால் அந்தப் படம் டபுள் மாஸாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

முருகதாஸின் இந்த பதில் ரசிகர்கள்பலரை மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்படி சொல்லி தானே தர்பார் படத்தில் தலைவரை வச்சி செய்தீங்க என சிலர் கேள்வி எழுப்பவும் செய்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.