Muruga Song From Yadhum Oore Yavarum Kelir

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் சிம்பு கைகோர்த்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Muruga Song From Yadhum Oore Yavarum Kelir : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் அடுத்ததாக லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப் படங்கள் வெளியாக உள்ளன.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விவேக், மோகன்ராஜா, மகிழ்திருமேனி மற்றும் பல முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தற்போது இந்த திரைப்படத்தில் இருந்து முருகா என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் சிம்புதான் பாடியுள்ளார். இதன் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியுடன் சிம்பு இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி மற்றும் சிம்பு ஆகியோர் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்க சிவந்த வானம் என்ற படத்தில் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Attachments area