Muperum Devigal

முப்பெரும் தேவியர்!

☆ அகிலாண்ட கோடி, பிரம்மாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் அற்புத அவதாரங்களில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ரூபிணிகளாக, காட்சி தரும் திருத்தலங்கள்தான். மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில்..

☆ பாண்டிய மன்னனின் உத்தரவுப்படி, இச்சா சக்தியாகிய திருவுடை அம்மனை வடிவமைக்க தேர்ந்த கல் ஒன்றைச் சிற்பி, மலை உச்சியில் இருந்து எடுத்துக் கீழே கொண்டு வரும்பொழுது. பிடி நழுவி உருண்டு அந்த கல், மூன்று பாகங்கள் ஆனது.

☆ மனம் பதறிய சிற்பி தன் கைகளைத் துண்டித்துக் கொள்ளப் போனபொழுது, பராசக்தி தரிசனம் கொடுத்தருளினாள்.

* “இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என மூவராக உருக் கொள்ளவே மூன்று பகுதிகளாக ஆனேன். மூவரின் உருவங்களையும் வடித்து, மூன்று கோயில்களிலும், நிறுவி விடுவாயாக’ என உத்தரவிட்டு மறைந்தாள். அப்படி காட்சி தந்த தினம் பௌர்ணமி ஆகும்.

☆ சென்னையைச் சுற்றிலும் “ஃ’ வடிவத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில்களை இணைக்க அரசர் காலத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இன்றைக்கும் மேலூரில் இந்தச் சுரங்கப் பாதையைக் காணலாம்.

☆ சிறப்பு: வெள்ளிக்கிழமை பௌர்ணமி இரண்டும் சேர்ந்து வரும் நாளில் மேலூரிலுள்ள திருவுடை அம்மனைக் காலையிலும், திருவொற்றியூரில் உள்ள வடிவுடை அம்மனை உச்சியிலும், வட திருமுல்லைவாயிலிலுள்ள கொடியிடை அம்மனை மாலையிலும் விரதம் இருந்து வழிபட்டால், காசி – இராமேஸ்வரம் சென்று வந்த பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here