Mumtha Mohandoss Re-Entry in Vishal Movie

பல வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து விஷாலின் எனிமி படத்தில் நடிக்கவுள்ளார்.

Mumtha Mohandoss Re-Entry in Vishal Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவர் முதலில் நடித்த செல்லமே சண்டக்கோழி, திமிரு போன்ற திரைப்படங்கள் இவருக்கு வெற்றியைத் தந்தது.

இதனைத் தொடர்ந்து தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, பாண்டியநாடு, பூஜை, மருது, போன்ற பல திரைப்படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் அடுத்ததாக ஆர்யாவுடன் இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் துபாயில் தொடங்க உள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ் இந்தப் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.

இவர் ஏற்கனவே விஷாலுடன் இணைந்து சிவப்பதிகாரம் என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.