
பிரபல நடிகையும் பிக் பாஸ் 2 சீசன் போட்டியாளருமான மும்தாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பரபரப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழில் மோனிஷா என் மோனலிசா, வீராசாமி, குஷி என பல படங்களில் நடித்திருந்தவர் மும்தாஜ்.
திரையுலகில் தற்போது பெரியதாக வாய்ப்பில்லாத நேரத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பெரும்பாலான மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
இந்நிலையில் தற்போது மும்தாஸ் அளித்த பேட்டி ஒன்றில் மீ டூ பிரச்சனைகள் குறித்தும் உங்களுக்கும் இது போன்ற கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளதா என கேட்டதற்கு ஒரு இயக்குனர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற போது அவரை செருப்பால அடித்தேன். இந்த பிரச்சனை நடிகர் சங்கம் வரை சென்றது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் தற்போது அவரின் பெயரை கூறுவீர்களா? என கேட்டதற்கு மாட்டேன் ஏனென்றால் அவர் தற்போது திருந்தி இருக்கலாம். அவருக்கென குடும்பம் குழந்தைகள் இருக்கும் நான் யாருனு சொல்றதால அவர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம் என கூறியுள்ளார்.