Mumbai Indians
Mumbai Indians

Mumbai Indians :

கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டு பிளிசிஸ் (96), சுரேஷ் ரெய்னா (53) ஆகியோரின் சிறந்த பேட்டிங்கால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் நாளை தொடக்கம் – கோப்பை வெல்லுமா csk?

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர்.

பஞ்சாப் அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டமான 56-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி கிறிஸ் லின், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ராபின் உத்தப்பா கடைசி வரை நின்று போராடி 40 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களே அடிக்க முடிந்தது.

இதனையடுத்து 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக், ரோகித் சர்மா களம் இறங்கினார்கள்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஜோடி சேர்நது ரன்களை குவிக்க துவங்கினர்.

இவர்களின் ஜோடி பிரிக்க எண்ணிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எண்ணம் தோல்வியில் முடிந்தது. இதன் மூலம் 16.1 ஓவரில் மும்பை அணி 134 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.