Mumbai Indians
Mumbai Indians

Mumbai Indians : ஐபிஎல் தொடரின் 34-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை அணியை வெற்றி!

இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, டி காக் களமிறங்கினர். ரோகித் 30 ரன்னிலும், டி காக் 35 ரன்னிலும் அவுட்டாகினர்.

அடுத்து பென் கட்டிங் 2 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 15 பந்துகளில் 32 ரன் விளாசினார்.

இறுதியில், மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்களை எடுத்தது. குருணாள் பாண்டியா 37 ரன்னுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 128 ரன் எடுத்து மும்பை அணியிடம் தோல்வியை தழுவியது.

டெல்லி அணியில் அதிக பட்சமாக பிரித்வி ஷா 20 ரன்னும் தவான் 35 ரன்னும் அக்சார் பட்டேல் 26 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதனால் மும்பை அணி எளிதில் தனது வெற்றியை அடைந்தது.