முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் டீசரை சூர்யா வெளியிட யூடியூபில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

Mugen Rao in Velan Teaser Records : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் மலேசியத் தமிழரான முகேன் ராவ்.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

வேலன் படத்தின் டீசரை வெளியிட்ட சூர்யா.. டீசர் படைத்த சாதனை.!!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் கவின் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் கலைமகன் முபாரக் அவர்களின் ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முகேன் ராவுடன் இணைந்து நடிகர் சூரி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நேற்று மாலை 5.30 மணிக்கு சூர்யா படத்தின் டீசரை வெளியிட்டார்.

இதனையடுத்து படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில் யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Velan - Official Teaser | Mugen | Soori | Prabhu | Kavin | Gopi Sundar | Kalaimagan Mubarak