
Is MS Dhoni The Best Captain – சிறந்த கேப்டன் தோனி : 2007-ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பையையும் இந்திய அணி தோனி தலைமையில் வென்றது.
37 வயது கொண்ட தோனி தற்போது இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பெயரில் தோனி கழற்றி விடப்பட்டார்.
இதனை நிரூபிக்கும் விதமாக நடந்துக் கொண்டு இருக்கும் ஆஸ், அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் பல தரப்பில் இருந்து பலவாறு கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றது.
இப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி வீரருமான ஷாகித் அப்ரிடி தனது கருத்தை கூறி உள்ளார்.
ஷாகித் அப்ரிடி கூறியது : தோனியை ஓய்வு பெறுமாறு சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த போது அவர், இந்திய அணிக்காக தோனி ஒரு நல்ல அடிதளத்தை அமைத்து கொடுத்ததும் இல்லாமல், இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்று தந்து உள்ளார்.
மேலும் இது போன்று பல சாதனைகள் செய்துள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
வரும் 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தோனி தேவை. அப்போது தான் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் என்றும் கூறினார்.
அது மட்டும் இன்றி, எனக்கு பிடித்த வீரர்களில் ஒருவராக விராட் கோலி உள்ளார். அவரது ஆட்டம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இருந்தும் கேப்டனாக அவர் ஈனும் நிறைய முன்னேற வேண்டும். என்னை பொறுத்த வரை இந்திய கேப்டன் பதவியில் தோனி தான் சிறந்தவர்.