MS Dhoni Picture
MS Dhoni Picture

MS Dhoni Picture – ஆஸ்திரேலியாற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியாவை வெற்றி பெறச் செய்த முன்னாள் கேப்டன் படத்தை, ஐசிசி சுட்டுரை அதாவது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கௌரவித்துள்ளது.

இதனால் தோனி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்து உள்ளனர்.

மூன்று ஒருநாள் ஆட்டங்களிலும் அரை சதம் அடித்து மொத்தம் 193 ரன்களுடன் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் தோனி.

அடிலெய்ட், மெல்போர்ன் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு வித்திட்டார்.

சில மாதங்களாக சரிவர ஆடாத நிலையில் தான் பார்மை இழந்ததாக தோனியை பலர் விமர்சனம் செய்தனர்.

இதனை பொருட்படுத்தாமல் தோனி தனது இயல்பான முறையில் இருந்தார். ஒருநாள் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய இருந்தார் தோனி.

இதனால், அவரை விமர்சித்தவர்கள் வாய் முடிகொண்டனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது டிவிட்டர் பக்கத்தில் தோனியின் படத்தை வைத்து உள்ளது.

ஐசிசி டிவிட்டர் பக்கத்தில் வைக்கப்பட்டு இருந்த சிறந்த படம் இதுதான் என பல ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

MS Dhoni Picture
MS Dhoni Picture