MS.Dhoni Jersey : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019, Pro KabaddiLeague

MS.Dhoni Jersey :

வழக்கமாக டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அணியின் லோகோ, அறிமுக எண் மட்டும் கொண்ட வெள்ளை நிற ஜெர்சி அணிந்து அணிவர்.

ஆனால் இம்முறை டெஸ்ட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் வீரர்கள் தங்களது பெயர் மற்றும் நம்பர் கொண்ட ஜெர்சியை அனிந்து விளையாட உள்ளனர்.

இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. எனவே இந்திய அணி வீரர்களுக்கும் பெயர் மற்றும் நம்பர் கொண்ட ஜெர்சி ரெடியாகி வருகிறது.

இந்நிலையில், தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் அவரது ஜெர்சி எண் வேறு வீரருக்கு கொடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்திற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த தொகை – இத்தனை கோடியா!

பிசிசிஐ தெரிவித்ததாவது, இந்திய அணி வீரர்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஜெர்சி நம்பர்களையே டெஸ்ட் போட்டியிலும் பயனபடுத்துவார்கள்.

தோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் போட்டியில் இல்லாத காரணத்தால் அவரது ஜெர்சி எண் 7 வேறு யாருக்கும் கொடுக்கப்படாது. ஜெர்சி நம்பர் 7 என்றுமே தோனியுடையதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அளித்த சச்சின் டெண்டுல்கரின் எண்ணான 10 இதுவரை எந்த வீரருக்கும் கொடுக்கவில்லை.

சச்சினை கவுரப்படுத்தும் வகையில் அந்த எண் வேறு யாருக்கும் கொடுக்கப்படாது என அதிகாரப்பூர்வமற்ற முறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.