MS Dhoni and Rohit Sharma
MS Dhoni and Rohit Sharma

MS Dhoni and Rohit Sharma – இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்., சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

முதலில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் தொடரை 1-1 என சமநிலை அடைந்தது. மேலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என வெற்றி பெற்றது.

அடுத்ததாக விளையாட இருக்கும் மூன்று போட்டிகள் உள்ளடக்கிய ஒருநாள் தொடர் வரும் 12-ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

சிட்னியின் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளாத வீரர்கள் இந்த ஒருநாள் போட்டியில் இடம் பிடித்து உள்ளனர்.

மற்றும், ரோகித் சர்மாவிற்கு பெண் பிள்ளை பிறந்த நிலையில் அவர் அவசரமாக ஆஸ்.,-வில் இருந்து இந்தியா வந்தார்.

இதனை தொடர்ந்து ஒருநாள் போட்டியில் அவர் விளையாட உள்ளதால் அவரும் ஆஸ்., புறப்பட்டார்.

மற்ற வீரர்கள் அதாவது, தோனி, ஜாதவ், அகமது உள்ளிட்ட வீரர்கள் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்றனர்.

கலீல் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ஜாதவ் தனது டிவிட்டர் பக்கத்திலும் புறப்பட்டு சென்ற புகைப்படங்களை பதிவிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here