Mr Local vs Sindhubaadh
Mr Local vs Sindhubaadh

Mr Local vs Sindhubaadh – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மூன்று மாதத்திற்கு ஒரு படத்தை வெளியிடும் அளவு பிஸி நடிகராகவும் உள்ளார்.

அந்தவகையில் 2016 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் இவருடைய நடிப்பில் தலா ஆறு படங்கள் வெளியாகியிருந்தன.

கூகுளில் யார் டாப்? அஜித்தா? விஜயா? – அதிர வைக்கும் புள்ளி விவரம்.!

இந்த சாதனையை இந்த ஆண்டே விஜய் சேதுபதி முறியடித்து விடுவார் போலிருக்கிறது. ஆம். விஜய் சேதுபதி நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த மாதம் சிந்துபாத் வெளியாகவுள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களின் இயக்குனர் அருண் குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலியும் அவருடைய மகனாக அவரது சொந்த மகன் சூர்யாவும் நடித்துள்ளனர்.

மீண்டும் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி – அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படம் மே 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சிந்துபாத் படத்துக்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.

இதனால் சிந்துபாத் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாகவும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.