MR.Local Updates
MR.Local Updates

MR.Local Updates : எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த இளம் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்? எத்தனை படம்பா?

மேலும் ஹிப்ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தற்போது இப்படம் மே இறுதியில்தான் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் அனிருத் பாடிய பாடல் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது பாடலை இன்று படக்குழு வெளியட்டுள்ளனர். கலக்கு மிஸ்டர் லோக்கல் எனும் இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.

Mr. லோக்கல் படத்தில் சிவாவுடன் நடித்துள்ள 5 முன்னணி தமிழ் நடிகர்கள் – முதல் முறையாக வெளியான தகவல்.!

இதைதொடர்ந்து இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஏப்ரல் 20-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஆர்யா, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here