MR.Local Trailer
MR.Local Trailer

MR.Local Trailer : எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.

இப்படத்தில் சதீஷ், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹிப் ஹாப் ஆதி முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

குவியும் படங்களால் சம்பளத்தை உயர்த்திய யோகி பாபு – ஓர் நாளைக்கே இத்தனை லட்சமா?

முன்னதாக இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் காரணம் ஏதும் சொல்லாமல் மே 17-ம் தேதிக்கு இப்படம் தள்ளிபோவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடல் மற்றும் டிரைலர் நாளை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மூன்றாம் பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் மிஸ்டர் லோக்கல் மீண்டும் தள்ளிபோகும் என ஒரு செய்தி வைரலாக பரவியது. ஆனால் இந்த தகவலை இயக்குனர் ராஜேஷ் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் இந்தமுறை படம் சொன்ன நேரத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.